கோவை வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

கோவை,
தீபாவளி பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் கோட்டரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்புரயில் (எண்:06056), வரும் 25-ந்தேதி இயக்கப்படுகிறது.இந்த ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் இடையிலான சிறப்புரயில் (06055), சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 26-ந் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்தரயில், கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், ஆலூவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரயில்நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 7 ஏ.சி.பெட்டிகளும், படுக்கை வசதி கொண்ட பெட்டி 6-ம், முன்பதிவு இல்லாத இருக்கை வசதி பெட்டி 2-ம் இனைக்கப்பட்டுள்ளது.திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்புரயில் கோவைக்கு காலை 4.12 மணிக்கு வந்து 4.15-க்கு புறப்பட்டு செல்லும். சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் இடையிலான சிறப்புரயில் கோவைக்கு இரவு 11.03-க்கு வந்து 11.05-க்கு பிறப்பட்டு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.