கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் உள்ள எஸ் என் எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25வது ஆண்டை முன்னிட்டு கல்லூரியின் வளாகத்தில் உள்ள மைதானத்தில் கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் மனிதநேயன் தலைமையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி மற்றும் பிளாக் ஷீப் யூடியூப் சேனல் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடத்த முடிவுுசெய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான அனுமதி ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இதில் முதலில் வரும் ஆயிரம் பேருக்கு முன்னுரிமை என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் போலீஸ் அனுமதி மற்றும் தீயணைப்பு துறை அனுமதி மருத்துவத்துறையின் அனுமதி போன்ற எந்த ஒரு அரசு அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடும் ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்கள். இந்நிலையில் 1 மணி முதல் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சுமார் 15,000 பேர் கல்லூரியின் முன்பு கூடினர் .இதில் ஆன்லைன் மூலம் அனுமதி வாங்கியவர்கள் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை அனுமதித்து விட்டு மீதமுள்ள 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு கூடியிருந்த மாணவர்களும் பொதுமக்களும் கோபமடைந்து கல்லூரியின் முன்புற கேட்டின் மீது ஏறி உள்ளே செல்ல முற்பட்டனர் .இதனால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் உருவானது .இந்த கூட்ட நெரிசலில் சரவணம்பட்டி விசுவாச புரத்தைச் சேர்ந்த ராஜ் என்பவரது மகள் ஐஸ்வர்யா (18 ) நந்தினி (20) மற்றும் விசுவாச புரத்தை சேர்ந்த தினேஷ் என்பவரது மகள் ஹரிணி (17) ஆகியோர் கீழே விழ அவர்கள் மீது மாணவ மாணவிகள் ஏறி மிதித்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். இதில் நந்தினியின் உடலில் முகம் மற்றும் நெஞ்சு , கைகளில் காயங்களும் ஐஸ்வர்யா என்பவருக்கு வலது தோள்பட்டையிலும் இடது கண் அருகே ரத்தக்காயமும் ஏற்பட்டது. ஹரிணி என்ற மாணவிக்கு இடது தோள்பட்டையும் இடது மணிக்கட்டுக்கு கீழே ரத்த காயமும் ஏற்பட்டதை தொடர்ந்து கல்லூரி ஆம்புலன்ஸ் மூலமாக சரவணம்பட்டியில் உள்ள விமல் ஜோதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்். இதனைத் தொடர்ந்து மூன்று மணி அளவில் கல்லூரியின் முன்பாக நின்றிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அங்கிருந்த பிளக்ஸ் பேனர் மற்றும் சிறு கற்களை எடுத்து கல்லூரியில் உள்ள வீசி பிரச்சனை செய்து கொண்டிருந்தபோது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வந்த கார் கல்லூரியில் உள்ளே சென்றபோது காரின் பின்னால் அங்கிருந்த மாணவர்கள் ஒன்றாக தள்ளுமுள்ளு செய்து கல்லூரியில் உள்ளே நுழைய முற்பட்டனர்். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் பிலோமினா அவர்கள் தடுத்து நிறுத்திய போது சிறப்பு உதவி ஆய்வாளரை கீழே தள்ளி அவரை மிதித்துக் கொண்டு மாணவ மாணவிகள் கல்லூரியில் உள்ளே சென்றனர் .இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் பிலோமினாவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து கல்லூரி ஆம்புலன்ஸ் மூலமாக விமல் ஜோதி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மூன்று முப்பது மணி அளவில் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி தொடங்கிய போது ஐந்தாயிரம் பேர் கூட கூடிய மைதானத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் பொதுமக்களும் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டு அங்கும் இங்கும் ஓடி அங்கிருந்த தடுப்புச் சுவர் மீது ஏர முற்பட்டபோது அந்த சுவர் இடிந்து விழுந்த நிலையில் அருகில் இருந்த எஸ் என் எஸ் அகாடமி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவிக்கும் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் லீபன் ராஜ் என்பவருக்கும் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களையும் கல்லூரி ஆம்புலன்ஸ் மூலமாக அதே தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .இந்நிகழ்ச்சியை காண வந்த 10 வயது முதல் கல்லூரி மாணவ மாணவிகள் வரை சுமார் 16 பேர் உட்பட ஒரு பெண் சிறப்பு ஆய்வாளர் ஆகியோர் காயம் அடைந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .மேலும் கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு முன் ஏற்பாடும் செய்யாமல் அரசு அனுமதியும் பெறாமல் அரசு அதிகாரிகளிடமும் காவல்துறையிடமும் வாய்மொழி உத்தரவை மட்டும் பெற்றுக் கொண்டு அதிக அளவில் பொதுமக்களையும் மாணவ மாணவிகளையும் கல்லூரிகள் நிகழ்ச்சிக்காக அனுமதித்ததே இதற்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கோவை மாவட்ட கிழக்கு உதவி ஆணையாளர் அருண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் மாணவிகள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர்களை நலம் விசாரித்தார்். மேலும் கல்லூரிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வை கல்லூரி நிர்வாகம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் முன்பே காவல்துறை அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் சரியாக செய்திருந்தால் இந்த ஒரு சம்பவத்தை தவிர்த்து இருக்கலாம் ஆனால் அதை அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி நிர்வாகமும் செய்ய தவறி விட்டது என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.