விஸ்வகர்மா சமுதாய மக்களின் தொழில் கூடங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க கோரிக்கை

கோவை,

விஸ்வஜன முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் வெ.

வேல்முருகன் தலைமையில் மாநில நிர்வாகிகள்  தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆகிய தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் விஸ்வஜன முன்னேற்ற கழகத்தின் கோரிக்கைகள் 273 மற்றும் 274 இடம் பெற்றுள்ளது. தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல கோவில் அறங்காவலர் தலைவராக விஸ்வகர்மா சமுதாய மக்களை நியமிக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் விஸ்வகர்மா மக்களை சேர்க்க வேண்டும் .அதேபோல நீண்ட நாள் கோரிக்கையான விஸ்வகர்மா மக்கள் மேம்பட விஸ்வகர்மா நல வாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும். விஸ்வகர்மா சமுதாய மக்களின் தொழில் கூடங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் .இந்து அறநிலைத்துறை கீழ் உள்ள கோவில்களில் பாரம்பரிய பணிகளை மேற்கொள்ள விஸ்வகர்மா தச்சர் ,சிற்பி, பொற்கொல்லர் போன்றோரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகி கே .எஸ். முத்துசாமி ஆச்சாரிக்கு விருதுநகர் மாவட்டத்தில் மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.