சுப்ரா ஸ்கூல் ஆஃப் யோகா பட்டமளிப்பு விழா

கோவை,

அமெரிக்காவைச் சேர்ந்த சுப்ரா ஸ்கூல் ஆஃப் யோகாவின் சர்வதேச சான்றிதழ் பெறும் யோகா ஆசிரியர்களின் பட்டமளிப்பு விழா கோவையில் நடைபெற்றது.

யோகா அலையன் சால் அங்கீகரிக்கப்பட்ட இன்டர்நேஷனல் டீச்சர்ஸ் ட்ரைனிங் கோர்ஸ் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக நடைபெற்று வந்தது. இதில் அமெரிக்கா, ஜப்பான், லண்டன், ஜெர்மனி ,பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் படித்தனர்.

தொடர்ந்து இவர்களுக்கான பட்டமளிப்பு விழா அன்னபூர்ணா ஹோட்டலில் நடைபெற்றது .இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஐசி டைரக்டர் டாக்டர் ரூபா குணசீலன் ,நேரு கல்லூரியின் என்ஐஐடிஎம் முதல்வர் டாக்டர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். தொடர்ந்து தன்னம்பிக்கை பேச்சாளர் சூரியன் பேசினார். பின்னர் சுப்ரா ஸ்கூல் ஆப் யோகா நிறுவனர் யோகச்சாரியா சுப்பிரமணியன் நாச்சியப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சர்வதேச அளவில் அங்கீகாரம் அளிக்கும் இந்த யோகா ஆசிரியர் பயிற்சியில் பங்கேற்க வயது ,மொழி, படிப்பு தடை இல்லை. மூன்று மாத பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் மூலமாகவே கற்றுக்கொள்ள இயலும். கொரோனாவிற்கு பின் உலகம் முழுவதும் யோகா ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே அதிக அளவில் வேலை வாய்ப்பு தற்போது உருவாக்கி இருக்கும் யோகா ஆசிரியர் படிப்பை அனைவரும் கற்று பயன் பெறலாம் என்றார்.விழாவில் பயிற்சி பெற்ற மாணவர்கள் யோகாசனங்களை செய்து காட்டியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.