கூடுதல் கட்டணம் தராத பெண்ணிடம் தகராறு செய்த ஆட்டோ டிரைவர்

கோவை

கோவை ஒண்டிப்புதூர் எஸ் எம் எஸ் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் என்பவரின மகள் ஐஸ்வர்யா( 23 ). சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவர் சென்னையில் இருந்து டிராவல்ஸ் பஸ் மூலம் கோவைக்கு வந்துள்ளார். பின்னர் ஹோப் காலேஜ் பகுதியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக ஓலா  ஆப்  மூலம் ஆட்டோ ஒன்றை புக் செய்துள்ளார் .ஐஸ்வர்யாவை ஏற்றி கொள்வதற்காக அங்கு வந்த ஆட்டோ டிரைவர் கூடுதல் பணம் கேட்டு உள்ளார். அப்போது ஐஸ்வர்யா ஆப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பணத்தை மட்டும் தான் தருவேன் என்றும் கூடுதல் பணம் தர முடியாது என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து ஆட்டோ டிரைவர் தகாத வார்த்தைகள் பேசியதோடு ஐஸ்வர்யாவை தாக்க முயன்றார். பின்னர் ஐஸ்வர்யா பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆட்டோ டிரைவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆட்டோ டிரைவர் விஷ்ணு ராஜு என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்  மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.