ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பயணியை காப்பாற்றிய ரயில்வே போலீசார் வைரலாகும் வீடியோ கண்ணூரில் இருந்து எஸ்வந்த்பூர் செல்லும் ரயில் கோவை வந்த சேலத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் இறங்க வேண்டிய கோவை ரயில் நிலையம் வந்தது தெரியாமல் உறங்கியுள்ளார் ரயில் புறப்படும் நேரத்தில் விழித்த சிவகுமார் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டபோது நிலை தடுமாறி நடைபாதைக்கும் ரயிலுக்கும் இடையில் தவறி விழுந்துள்ளார் அப்போது ரோந்து பணியில் இருந்த ரயில்வே தலைமை காவலர் ரமேஷ் மற்றும் மாரிமுத்து ஆகியோர் உடனடியாக ஓடி சென்று தவறி விழுந்த சிவகுமாரை காப்பாற்றினர் இந்த சிசிடிவி வீடியோ இணையத்தில வைரலாக பரவி வருகிறது கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்துக்குள்ளான நபரை காப்பாற்றிய ரயில்வே போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *