
கோவை,
கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 2வது பொதுக்குழுவும், 2022-2024 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பும் நடைபெற்றது. இதில் பட்டையதலைவர் மயில்சாமி கூட்டத்திற்கு தலையேற்று நடத்தினார்.
புதிய தலைவராக எம்.ரவிக்குமார் , செயலாளராக எஸ். சாந்தநரசிம்மன், பொருளாளராக கே. ரமேஷ் மற்றும் 23 செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். சிறப்பு விருந்தினராக இக் கல்லூரியில் 1962 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவரும்,ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
விழாவில் 30 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் ஆண்டுகளிலும் அரசு தொழில் நுட்பக்கல்லூரியில் பயிலும் ஏழை மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணம் முழுவதையும் கோவை தொழில்நுட்பக் கல்லூரியிின் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்று கொள்ளும் என்று தெரிவிக்க பட்டுள்ளது.