
கோவை,
கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த சாமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் வீட்டில் இருந்து திடீ ரென மாயமானார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம், பக் கத்தினர், உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர்.
ஆனால் அவர் கிடைக்கவில்லை.இதைய டுத்து சிறுமியின் தாய் பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகா ரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துசி றுமியை தேடி வந்தனர். அப்போது சிறுமி சென்னையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சென்னை விரைந்துசென்று சிறுமியை மீட்டனர். பின்னர்சிறு மியை கோவைக்கு அழைத்து வந்து விசா ரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக் கும் சென்னையை சேர்ந்த 17 வயது சிறுவ னுக்கும் இன்ஸ்டாகிராம்மூலம் பழக்கம் ஏற் பட்டுள்ளது.
இது நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்துவந்துள்ள னர். அப்போது சிறுவன், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி சென்னைக்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு சிறுவன், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந் தது.
மேலும் விசாரணையில், சிறுமியை அவரது தாயாரின் தங்கை மகன் அரவிந்த் (25) என்பவரும் சிறுமியை 2 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார், இந்த வழக்கை போக்சோ வழக் காக மாற்றி சிறுமியை கடத்தி சென்ற 17 வயது சிறுவன் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.