மருமகளை தாக்கிய மாமியார் மீது வழக்கு 

கோவை

கோவை சிங்காநல்லூர் அடுத்த வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தனிமலை ராஜா .இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இலக்கியா (31) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் .இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளார். தமிழ் இலக்கியா பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். காதல் திருமணம் செய்தது முதல் தமிழ் இலக்கியாவுக்கும்  அவரது மாமியார் முத்துலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று தமிழ் இலக்கியாவின் மகனை பாட்டி முத்துலட்சுமி அடித்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து தமிழ் இலக்கியா  குழந்தையை ஏன் அடித்தீர்கள் என தனது மாமியார் முத்துலட்சுமி இடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முக்கிய நிலையில் மாமியார்  முத்துலட்சுமி மற்றும் அவரது மூத்த மகளின் மகள் ஸ்ரீநிதி ஆகியோர்  சேர்ந்து தமிழ் இலக்கியாவை சரமாரியாக தாக்கியுள்ளனர் .உருட்டு கட்டையால் அடித்து உதைத்தனர்.இதில் தமிழ் இலக்கியாவுக்கு தலை மற்றும் மார்பு பகுதியில்  பலத்த காயம் ஏற்பட்டது. இதை பற்றி தகவல் அறிந்த அவரது கணவர்  தனிமலை ராஜா உடனே வீட்டிற்கு வந்து காயமடைந்து இருந்த மனைவியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். தொடர்ந்து தமிழ் இலக்கியா சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மருமகளை தாக்கிய மாமியார் முத்துலட்சுமி மற்றும் ஸ்ரீநிதி ஆகிய இருவரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.