ஆம்லெட் லேட் ஆனதால் பிரியாணி கடைக்காரருக்கு அடி உதை

கோவை,

கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் என்பவரின் மகன் சந்தோஷ் (45 ).இவர் கார்டன் வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் சந்தோஷ் தனது நண்பர் சந்துரு பிரசாத்துடன் சேர்ந்து காந்திபுரம் 2வது வீதியில் உள்ள பிரியாணி ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது சந்தோஷ் அங்கிருந்த ஊழியரிடம் சப்ளையரிடம் ஆம்லெட்  ஆர்டர் செய்துள்ளார். ஆம்லெட் ஆர்டர் செய்து வெகு நேரம் ஆகியும் வராமல் இருந்துள்ளது .இதனால  ஆத்திரமடைந்த சந்தோஷ் ஆம்லெட் ஏன் இன்னும் வரவில்லை என கேட்டு தகராறு செய்யத் தொடங்கினார். அப்போது கடையின் உரிமையாளர் ராஜமாணிக்கம் ஆம்லெட் வந்துவிடும் என கூறி சமாதானப்படுத்த முயன்றார். அப்போது இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது .தகராறு முக்கிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர் .இதில் சந்தோஷ் மற்றும் சந்துரு பிரசாத் ஆகியோர் தாக்கியதில் கடை ஊழியர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் விஸ்வநாதன்( 42) என்பவருக்கும் கடையின் உரிமையாளர் தனசேகரன் என்பவரின் மகன் ராஜமாணிக்கத்துக்கு காயம் ஏற்பட்டது .இதேபோல  பிரியாணி கடை உரிமையாளர் ராஜா மாணிக்கம் மற்றும் அங்கிருந்து ஊழியர்கள் தாக்கியதில் சந்தோஷ் மற்றும் சந்துரு பிரசாத்துக்கு முகத்தில் குத்தப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் பிரியாணி கடை உரிமையாளர் ராஜமாணிக்கம்( 42) சப்ளையர் விஸ்வநாதன்( 42) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் .அதேபோல பிரியாணி கடை உரிமையாளர் ராஜமாணிக்கம் அளித்த புகாரின் பேரில் சந்தோஷ் (45), மற்றும் அவரது நண்பர் சந்துரு பிரசாத் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.