கோவை, எல்இடி விளக்குகள் ஒப்பந்த பணியில் 74 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீடு அலுவலகங்கள் உட்பட 26 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ். பி. வேலுமணி ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மீண்டும் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடுகள் அலுவலகங்கள் என 26 இடங்களில் தமிழகம் முழுவதும் தற்போது சோதனை நடைபெற்ற வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த பொழுது கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றம் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களின் போது மிகப்பெரிய அளவில் முறையீடு செய்து தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்த பணிகள் வழங்கிய வகையில் அரசுக்கு சுமார் 74 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையான லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சோதனை நடை பெற்று வருகிறது. எஸ். பி .வேலுமணியின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் தற்போது சோதனை நடைபெற்ற வரும் தகவலை அறிந்த அதிமுகவினர் அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர். இதன்படி மார்க்கெட் விலையை விட கூடுதல் விலைக்கு எல்.இ.டி விளக்குகளை வாங்கி பொருத்தியதில் ஐந்து மாவட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது இதன்படி தமிழக அரசுக்கு 74 கோடியே 58 ஆயிரத்து 700 ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை அரசுக்கு ஏற்படுத்தியதாக அப்போது அமைச்சராக செயல்பட்ட எஸ் பி வேலுமணி முதல் குற்றவாளியாகவும் மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களான சந்திர பிரகாஷ் இன்ஜினியர் ஆர் சந்திரசேகர் சீனிவாசன் சித்தார்த்தன் ராஜன் ராதாகிருஷ்ணன் பரசுராமன் விஜயகுமார் மணிவண்ணன் மற்றும் பலர் மீது தற்போது லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதன்படி 120 b ,409, 420, 13(2), 13(1)(c), 13(1)(d) ஆகிய பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை அடுத்து கோவையில் சுகுணா புரத்தில் உள்ள உள்ள எஸ். பி .வேலுமணி வீடு , வடவள்ளியில் உள்ள இஞ்சினியர் ஆர்.சந்திரசேகர் வீடு அலுவலகங்கள் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அவரது ஆதரவாளர்கள் வீடுகளிலும் சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தகவல் அறிந்த எஸ் .பி. வேலுமணியின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர்.எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருவதை எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ச்சுணன் , பி.ஆர்.ஜி அருண்குமார் , தாமோதரன் , கந்தசாமி , அமுல்கந்தசாமி , கே.ஆர்.ஜெயராம் , ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.