தேசிய யோகா போட்டிக்கு கோவையைச் சேர்ந்தவர் தேர்வு

அந்தமானில் நடைபெற உள்ள தேசிய யோகா போட்டிக்கு கோவையைச் சேர்ந்தவர் தேர்வாகியுள்ளார்
கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவரின் மகன் ராஜேஷ்குமார் (35). இவர் சிஆர்ஐ நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கோவை ஓசோன் யோகா மையத்தில் தென்னிந்திய அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட கலந்து கொண்ட இந்த போட்டியில் மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை ராஜேஷ் குமார் வென்றார் . இந்த போட்டியில் ராஜேஷ் குமார் தனது மனைவி நந்தினி மற்றும் மகன் சித்தார்த் ஆகியோரும் யோகா போட்டியில் கலந்து கொண்டனர். இதை அடுத்து அவர் அந்தமானில் நடைபெற உள்ள தேசிய யோகா போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக யோகா கற்று வருவதாகவும் , உடல் ஆரோக்கியத்திற்காக கற்றுக்கொள்ள ஆரம்பித்த நான் இன்று யோகா ஆசிரியராக தேர்வு பெற்று யோகா பயிற்சி மையம் நடத்தி வருகிறேன் என்றார். யோகா பாட்டி நானம்மாள் போல 100 வயது வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக கற்றுக்கொள்ள ஆரம்பித்த நான் இன்று தேசிய யோகா போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளேன் .தேசிய யோகா போட்டியில் வெற்றி பெற்று அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொண்டு உறுதியாக வெற்றி பெறுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *