
கோவை மாவட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்க தலைமை அலுவலகத்தில் தலைமை தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் நடைபெற்றது . கூட்டத்தில் மறைந்த சங்கத்தின் துணைத்தலைவர் ராஜசேகர் மாமியார் தங்கம் அம்மாள் , ஆலோசகர் ரமணன் தந்தையார் ராமமூர்த்தி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . கூட்டத்தில் காங்கேயம்பாளையம் ஐந்து கடைகள் பிரச்சினைக்கு தீர்வுகாண உழைத்திட்ட தலைமை நிர்வாகிகள் பொருளாளர் சாமுவேல் ராஜ், செயலாளர் பாஸ்கரன், வெளியுறவுத் துறைத் தலைவர் செல்வின் ராஜன், சட்ட ஆலோசகர் விஜய் ஆனந்த், பாலா உட்பட நிர்வாகிகள் மற்றும் சின்னியம்பாளையம் ,தென்னம்பாளையம் ,காட்டம்பட்டி, குரும்பபாளையம் கிளை நிர்வாகிகளுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது . சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்படும் செயலாளர் ராஜன் ,விளம்பரத்துறை தலைவர் காளிதாஸ் ,துணைத்தலைவர் ராஜசேகர் ,மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது . கூட்டத்தில் ராமநாதபுரம் பகுதியில் இருந்து வருகை புரிந்து சிறப்பித்த ஜெய், மற்றும் மாட்டின் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர் . சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் சங்க வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும் என்று தலைவர் கேட்டுக்கொண்டார் . கூட்டத்தில் பொதுச் செயலாளர் முத்துராமலிங்கம் அவைத்தலைவர் தேவராஜ் துணை தலைவர் சத்யநாராயணா துணைச் செயலாளர்கள் நாராயணன் ,ஆனந்த் செய்தி தொடர்பாளர் தனிஷ், ஆலோசகர்கள் சேர்ம துரை, இலட்சுமணன், கோபாலகிருஷ்ணன் , பகுதி நிர்வாகிகள் மீசை வேலு ,தனசிங், நடராஜன், கார்த்திக் ராஜா, சுரேஷ், பாலா செயற்குழு பால்ராஜ் ,ராமலிங்கம் ,சிவசங்கர் ,அற்புதராஜ் ,தங்கராஜ் ,தேவராஜ் மற்றும் கதிர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .