ஹோட்டலில் கை கழுவும்போது கழன்று விழுந்த வைர பிரேஸ்லெட் எடுத்துச்சென்ற வாலிபர்களை தேடும் போலீஸ்

கோவை நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் ஆனந்த் என்பவரின் மனைவி ஹேமலதா (39). இவர் நேற்று மாலை தனது இரண்டு மகன்கள் உடன் அவிநாசி சாலையில் உள்ள கேஎஃப்சி ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட சென்றிருந்தார். சாப்பிட்ட அவர் கை கழுவி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார் .சிறிது நேரத்தில் அவர் கையில் அணிந்திருந்த வைர பிரேஸ்லெட் காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். காணாமல் போன பிரேஸ்லெட் வைர கற்கள் பதித்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ளது என்பதால் மீண்டும் அவர் ஹோட்டலுக்கு சென்று அது குறித்து கேட்டார் .அப்போது ஹோட்டலில் உள்ள ஊழியர்களுக்கு அது பற்றி எதுவும் தெரியவில்லை .பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஹேமலதா கை கழுவி விட்டு வரும் பொழுது அவர் கையில் இருந்து கழன்று ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் விழுந்து கிடந்தது. தெரிய வந்தது அதனை அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் எடுத்துச் செல்வதும் சிசிடிவி காட்சிகளில் தெரியவந்தது. இதை தொடர்ந்து ஹேமலதா பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார் .புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வைர பிரேஸ்லெட் டை. எடுத்துச் சென்ற வாலிபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *