கத்தியை காட்டி செல்போன் பணம் பறித்த வாலிபர்கள் கைது

கோவை வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் கோவிந்தராஜ் (41). கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் ஸ்வீட் மாஸ்டராக இவர் பணிபுரிந்து வருகிறார் .நேற்று காலை அவர் தனது நண்பர் செல்வராஜ் என்பவருடன் சாய்பாபா காலனி அழகேசன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கோவிந்தராஜ் இடம் இருந்த செல்போன் மற்றும் 2000 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர் .இதை அடுத்து கோவிந்தராஜ் சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் . புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தினர். விசாரணையில் வேலாண்டி பாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் தங்கராஜ் (28 ) கோவில் மேடு பகுதியைச் சேர்ந்த கருணாமூர்த்தி என்பவரின் மகன் சத்தியசீலன் என்கிற மதுரை (23 )என்பது தெரியவந்தது .தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *