120 அடி கிணற்றில் கார் பாய்ந்து விபத்து

நீரில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் பலி

ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு வரும்போது பரிதாபம் 

கோவை,

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தனியார் கிளம்பில் ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு திரும்பும் போது  கார் கிணற்றுக்குள்  பாய்ந்த விபத்தில் மூன்று பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.

கோவை வடவள்ளி பகுதியை மது என்பவரின் மகன் ரோஷன் (18) விவேக்பாபு என்பவரின் மகன் ஆதர்ஷ்(18),  ரவி(18) மற்றும் நந்தனன் ஆகியோர் நண்பர்கள் ஆவார்கள். கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரிகளில் படித்து வந்த  கல்லூரி மாணவர்களான இவர்கள் நேற்று ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக சிறுவாணி பகுதிகளில் உள்ள செலிபிரிட்டி கிளப்பிற்கு சென்றிருந்தனர் .நள்ளிரவு முழுவதும் ஓனம் பண்டிகையை ஒட்டி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நண்பர்கள் இன்று காலை 6 மணி அளவில் கிளப் பிலிருந்து புறப்பட்டு வடவள்ளி நோக்கி தங்களது காரில் சென்று கொண்டிருந்தனர்.சொகுசு  காரை ரோஷன் ஓட்டி சென்று கொண்டிருந்தார்.

 இந்நிலையில் தென்னம நல்லூர் மாரியம்மன் கோயில் அருகே  வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார்

பழனிச்சாமி என்பவர் தோட்டத்தில் இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு சென்றது. அதிவேகமாக வந்த கார் இரும்பு தடுப்பை உடைத்ததோடு அங்கே இருந்த 

 120 அடி ஆழ கிணற்றில் பாய்ந்து கவிழ்ந்தது. என்ன நடந்தது என கல்லூரி மாணவர்கள் சுதாரிப்பதற்கு முன்பே கார் நீருக்குள் மூழ்க துவங்கியது. காரை ஓட்டி வந்த ரோஷன் மட்டும் கார்  கண்ணாடியை உடைத்துக் கொண்டு சிறு காயங்களுடன் மேலே வந்தார். அவர் மேலே வந்து தகவலை கூறிய பின்னர் தான் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிய வந்தது. இதை அடுத்து அந்த தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியது. 120 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் சுமார் 50 அடி ஆழத்திற்கு தண்ணீர் உள்ளது. உடனே தோட்டத்தின் உரிமையாளர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தொண்டாமுத்தூர் போலீஸாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை துவக்கினர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அப்பகுதியில் குவிய துவங்கினர். மீட்பு பணிகளை தீய தீயணைப்பு துறையினர் வேகமாக மேற்கொண்டனர் ஆனால் கார் நீரில் அடியில் மூழ்கி இருப்பதால் சம்பவ நடந்து சில நிமிடங்களிலே ஆதேஷ், ரவி மற்றும் நந்தனன் ஆகியோர்  உயிரிழந்தனர். பலத்த படுகாயம் அடைந்த ரோஷன் என்பவரை தொண்டாமுத்தூர் போலீசார்  மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நீரில் மூழ்கி இறந்த  மூன்று பேரின் உடல்களை கிணற்றிலிருந்து எடுத்து பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நேருக்குள் மூழ்கி வந்தால் காரையும் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் கட்டி இழுத்து மீட்டனர். விபத்து குறித்த தகவல் அறிந்த கல்லூரி மாணவர்களின் குடும்பத்தார் அங்கு விரைந்து வந்து கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓணம் பண்டிகை கொண்டாட சென்ற கல்லூரி மாணவர்கள் கிணற்றில் கார் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் இறந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.