ஜவுளிக்கடை பூட்டை உடைத்து திருட்டு

கோவை ராமநாதபுரம் சுப்பையா தேவர் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவர் மகன் ஜெகதீசன் (36). இவர் திருச்சி ரோடு பகுதியில் பிப்டி பிப்டி என்ற பேரில் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையை பூட்டிவிட்டு பெங்களூருக்கு சென்று விட்டார். மீண்டும் அவர் நேற்று மதியம் கடைக்கு வந்து பார்த்த பொழுது கடையில் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த பொழுது 252 சட்டைகள் 70 பேண்ட்டுகள், 123 ஜீன்ஸ் பேண்ட்கள் மற்றும் லேப்டாப் ஆகியவை திருடு போய் இருந்தது. இதை தொடர்ந்து ஜெகதீசன் சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *