பெட்ரோல் பங்கில் ஏழு லட்ச ரூபாய் மோசடி : சூப்பர்வைசர் மீது வழக்கு

கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பவரின் மகன் சர்புதீன்(54). இவர் பெரிய கடை வீதி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இதே பங்கில் சூப்பர்வைசராக சர்புதீன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் பங்கில் விற்பனை தொகையான 7 லட்சத்து 61 ஆயிரத்து , 665 ரூபாயை நிறுவனத்தின் உரிமையாளரிடம் கொடுக்காமல் கையாடல் செய்துவிட்டு தலைமறைவு ஆகிவிட்டார் .இது குறித்து பெட்ரோல் பங்கின் மேனேஜர் சர்புதீன் உக்கடம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்துடன் தலைமறைவான சூப்பர்வைசர் சர்புதீனை போலீசார் தேடி வருகின்றனர்.