1,530 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

கோவை மாவட்டத்தில் 1,530 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் ஆன 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி அரசு தடுப்பூசி மையங்களில் செலுத்தப்படுகிறது. இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசி செப்டம்பா் 30 ஆம் தேதி வரை மட்டுமே இலவசமாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கோவை மாவட்டத்தில் 35 ஆவது கொரோனா தடுப்பூசி முகாம் 1,530 இடங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இதில், தகுதியான நபா்கள் இரண்டாம் தவணை, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *