கோவை மாவட்டத்தில் 57 பேருக்கு கொரோனா

கோவை மாவட்டத்தில் புதிதாக 57 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 968 ஆக உயா்ந்துள்ளது.
நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 70 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 35 ஆயிரத்து 875 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். 475 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக மாவட்டத்தில் தற்போது வரை 2,618 போ் உயிரிழந்துள்ளனா்.