கோவையில் விநாயகர் சதுர்த்தி
ட்ரோன் மூலம் கண்காணிப்பு

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்திக்கு 500 விநாயகர் சிலைகளுக்கு மாநகர போலீசார் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே மாநகர போலீஸ் சார்பில் 1500 போலீசார் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்று முதலே பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள 11 சோதனைச் சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிர படுத்தியுள்ளனர். ஊர்வலம் முதல் விநாயகர் சதுர்த்தி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் கேமரா மற்றும் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்.
மேலும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் அமைதியாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று முன்தினம் சிங்காநல்லூர் பகுதியில் திருநங்கைகள் வழிப்பறி செய்ததாக வந்த புகார் மீது 6 திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பணியில் இருந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்கான வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநங்கைகள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மாநகர போலீசார் செயல்பட்டு வருகின்றனர். திருநங்கைகள் தொடர்பான பல புகார்கள் வந்ததின் அடிப்படையில் 2 முறை கூட்டம் நடத்தி ஆலோசனைகள் வழங்கினோம். திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி யுள்ளோம்.இப்படி அறிவுரைகள் ஆலோ சனைகள் வழங்கியும் மீறி செயல்படும் திருநங்கைகள் மீது கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.