மேயர் கணவர் அடாவடி வசூல்
கலெக்டரிடம் எம்.எல்.ஏ., புகார்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் கட்சியினர் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.


அதில், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவை வடக்கு தாலுகா, சின்னவேடம்பட்டி சுப்புநாய்க்கன் புதூரில் சமுதாய வார சந்தையானது பல ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள வெள்ளக்கிணறு நஞ்சை கவுண்டன் புதூர், உடையாம்பாளையம், சுபநாயக்கன் புதூர் · சின்னவேடம்பட்டி, பூசாரிபாளையம் மற்றும் மணிகாரம்பாளையம் ஊர்களைச் சேர்ந்த ஊரைச் . சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த வார சந்தை மூலமாக பயன்பெற்று வருகிறார்கள் .மேலும் இந்த வாரச்சந்தையில் 110 ற்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் மேற்கண்ட ஊர்களில் இருக்கக்கூடிய உழவர் பெருமக்கள் இடமிருந்து பொருட்களை கொள்முதல் செய்து பொதுமக்கள் பயன் பெறுகின்ற வகையில் நியாயமான விலையில் வாரச்சந்தையில் பொருட்களை விற்று வருகிறார்கள். இந்நிலையில் எவ்வித முகாந்திரமும் இன்றி அரசு வருவாய் அதிகாரிகள் மேற்கண்ட பல ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வரும் சமுதாய வார சந்தையை இனி வகும் நாட்களில் செயல்படுத்தக்கூடாது என்று சிறு வியாபாரிகளுக்கும் அதை கவளித்து வரும் ஊர் பொதுமக்களுக்கும் அழுத்தம் தருகிறார்கள்.

எனவே இதில் உடனடியாக கவனம் செலுத்தி பொதுமக்கள் மற்றும் உழவர் பெருமக்கள் பயன்பெறும் இந்த வார சந்தையை தடையின்றி தற்போது உள்ளது போல் தொடர்ந்து செயல்பட ஆவணம் செய்திட வேண்டும்.சமுதாய வார சந்தையை கோவை மேயர் திமுகவை சேர்ந்த கல்பனாவின் கணவர் அனந்தகுமார் கடை அமைப்பவர்கள் தனக்கு பணம் தர வேண்டும் இல்லை என்றால் சந்தை நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில் எவ்வித முகாந்திரமும் இன்றி அரசு வருவாய் அதிகாரிகள் முலம் சந்தையை செயல்படுத்தக் கூடாது என சிறு வியாபாரிகளுக்கு அழுத்தம் அளித்து வருகிறார். எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி வாரச்சந்தையை தடையின்றி தற்பொழுது உள்ளது போலேயே தொடர்ந்து செயல்பட ஆவணம் செய்திட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.