பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் அர்ஜூன் (25). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த திவ்யா (22) என்பவரை கடந்த
2 வருடத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று அர்ஜூன் அவரது உறவினர் திருமணத்துக்கு
சென்றார். பின்னர் வீடு திரும்பினார். அப்போது அவர் குடிபோதையில்
இருந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
இதனால் திவ்யா கோபித்து கொண்டு அவரது தாயார் வீட்டுக்கு சென்றார். உடனே அர்ஜூன் தனது அண்ணன் ஆனந்த் மற்றும் தாயார் வசந்தியை அழைத்து கொண்டு
திவ்யாவின் வீட்டுக்கு சென்றார்.
அங்கு 3 பேரும் சேர்ந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அர்ஜூன்,திவ்யாவை தாக்கினார். பின்னர் அங்கிருந்து 3 பேரும் சென்றனர். சிறிது
நேரம் கழித்து மீண்டும் 3 பேரும் திவ்யாவின் வீட்டுக்கு சென்றனர்.
அப்போது திவ்யா மற்றும் அவரது தாயாரை, அர்ஜூன் மற்றும் ஆனந்த் தாக்கினர்.இதில் திவ்யா காயம் அடைந்தார். அவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் திவ்யாவை மீட்டு கோலார்பட்டி அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் . இதுகுறித்து திவ்யா கோமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அர்ஜூன், அவரது அண்ணன் ஆனந்த் மற்றும் தாயார் வசந்தி
மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
%d bloggers like this: