பக்கத்து வீட்டு பெண்ணுடன் தகராறு: கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு

கோவை செல்வபுரம் பனைமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மகன் ஆறுமுகம் (52). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் மனோகரன் என்பவரின் மகன் வினோத்குமார் (33) வினோத்குமார் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். ஆறுமுகத்தின் மகள் துர்காவுக்கும் வினோத்குமாருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வினோத்குமார் மீது புகார் அளிக்கப்பட்டு விசாரணையில் உள்ளது. அதேபோல ஆறுமுகத்தின் மருமகனிடம் வினோத்குமார் தகராறு செய்ததாக கோவை காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் புகார் அளிக்கப்பட்டு வினோத்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து ஜாமீனில் வினோத்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்தார். ஆத்திரம் தீராமல் இருந்து வந்த வினோத்குமார் மீண்டும் ஆறுமுகம் மற்றும் அவரது மகள் மருமகனிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் அவர்கள் மூவரையும் அடித்து உதைத்தார். இதை அடுத்து காயமடைந்த ஆறுமுகம் செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலிசார் வினோத்குமார் மீது வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *