மரத்தின் மீது பைக் மோதி விபத்து கல்லூரி மாணவர் பரிதாப சாவு: 2 பேர் படுகாயம்


கோவை,
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் விஷ்ணு (19). இவர் கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார் . இவர் இன்று காலை தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நண்பர்களான காந்திபார்க்கை சேர்ந்த சதீஷ் (19) மற்றும் இடையர் வீதியை சேர்ந்த விக்னேஷ் (19) ஆகியோருடன் ஒரு பைக்கில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். பைக் பொள்ளாச்சி ரோடு பகுதியில் குறிச்சி பொங்காளி அம்மன் கோவில் அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிரே வந்த லாரி மீது பைக் முயன்றது. அப்போது லாரி மீது மோதாமல் இருக்க பைக்கை பிரேக் போட முயன்ற போது கண்ணிமைக்கும் நேரத்தில் பைக் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே விஷ்ணு பரிதாபமாக இருந்தார். படுகாயம் அடைந்த விக்னேஷ் ,சதீஷ் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *