கஞ்சா சாக்லேட் கடத்தி வந்தவர் கைது: 15 பேருக்கு போலீஸ் வலை

கோவைகோவை நகரில் விதவிதமான போதைப் பொருள்கள் இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பவர்களை கைது செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று இரத்தினபுரி போலீசார் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மொபட்டில் வந்த நபரை பிடித்து சோதனை நடத்தினர். அவர் மொபட்டில் வைத்திருந்த பையில் சாக்லேட்டுகள் இருந்தது. மொபெட்டை ஒட்டி வந்த முதியவர் கடைகளுக்கு விற்பனை செய்ய சாக்லேட் கொண்டு செல்வதாக கூறியிருக்கிறார். பின்னர் ஒரு சாக்லேட் அடுத்து போலீசார் சாப்பிட்டு பார்த்தனர் அந்த சாக்லேட் வித்தியாசமான சுவையில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அது குறித்து விசாரணை நடத்திய போது கஞ்சா கலந்து போதைக்காக பயன்படுத்தும் சாக்லேட்டுகள் என்பது தெரிய வந்தது. மாணவர்களை குறிவைத்து இந்த சாக்லேட்டுகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதை அடுத்து அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையிப் அவர் கோவை அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் பாலாஜி (58) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் அண்ணா மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த போதை கஞ்சா சாக்லேட் கடத்தி விற்கும் கும்பல் குறித்த தகவல் கிடைத்தது. அதன்படி இதன் தலைவனாக டெயில் சுரேஷ் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார். இதை தொடர்ந்து டெயில் சுரேஷ், கௌதம், நந்தா, மோசஸ், கருப்பு கவுதம், பூபதி ,சந்தோஷ், விக்கி வேதா, தீபக் தமிழா ,சிகல் சந்தோஷ், கவாஸ்கான், மாணிக்கம், மதுரை, அம்புரோஸ், கருப்பு பிரவீன் ஆகிய 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பிடிபட்ட பாலாஜியை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 15 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.