கோவை மாவட்ட வர்த்தக சங்க தென்னம்பாளையம் கிளை கூட்டம்

கோவை,கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் தென்னம்பாளையம் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் சங்கத் துணைத் தலைவர் பரமசிவமூர்த்தி தலைமையில் நடைபெற்றது . தென்னம்பாளையம் கிளை செயலாளர் உதயகுமார் அனைவரையும் வரவேற்றார் . கூட்டத்தில் தலைமை கமிட்டியின் சார்பாக தலைவர் முத்துப்பாண்டி, பொருளாளர் சாமுவேல்ராஜ், வெளியுறவுத்துறை தலைவர் செல்வின் ராஜன் ,செய்தி தொடர்பாளர் தனிஷ் , ஆகியோர் கலந்து கொண்டனர் . கூட்டத்தில் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது . பிளாஸ்டிக் பாலிதீன் பைகளை ஒழிப்பதற்காக சங்கத்தின் மூலமாக மக்கும் பைகளை கடைகளின் மூலம் விலைக்கு மக்களுக்கு கிடைக்கச் செய்வது என்றும் சங்க வளர்ச்சிக்காக சிறு சேமிப்பு திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .இந்த கூட்டத்தில் முருகன் ,ராஜா, பெருமாள் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .