
கோவை,
கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் பாரிஜாதம் தம்பதியினரின் மகன் லக்ஷித் பாலச்சந்திரன் (11). இவர் வெள்ளலூர் பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்எஸ்விஎம் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாக யோகா பயிற்சி செய்து வருகிறார் .இதுவரை 20க்கும் மேற்பட்ட மாவட்ட மாநில அளவிலான யோகா போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார். கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில் லக்ஷித் பாலச்சந்திரன் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை வென்றார். மேலும் சாம்பியன் பட்டமும் அவர் வென்றுள்ளார் .இதை தொடர்ந்து அவர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச யோக போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இதுகுறித்து லக்ஷித் பாலச்சந்திரன் கூறும் போது ,நாம் செய்யும் உடற்பயிற்சிகளில் மிகச் சிறந்தது யோகா தான். அதனால்தான் தொடர்ந்து யோகா செய்து வருகிறேன் .100 வயது வாழ்ந்த யோகா பாட்டி பத்மஸ்ரீ நானம்மாளை போல உடல் நலம் பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறினார். சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ள லக்ஷித் பாலச்சந்திரனை பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஓசோன் யோகா மைய நிறுவனர் டாக்டர் பாலகிருஷ்ணன் உட்பட பலரும் பாராட்டினர்.