
கோவை,கோவை சாய்பாபா காலனி கே கே புதூர் 8வது வீதியில் ஹோப் இன் கேரேஜ் என்ற புதிய கார் டீடைல் ஸ்டுடியோ துவக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தை சிபிசிஐடி சிறப்பு அரசு வழக்கறிஞர் சங்கரநாராயணன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நிறுவனத்தின் பங்குதாரர்கள் சங்கர்,சபரி குமார், திவ்ய சரண், ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இங்கு அனைத்து விதமான கார்களுக்கும் தேவையான ஃபோர்ம் வாஷ், கார் அண்டர் சேசிங் வாஷ், இன்டீரியர் கிளீனிங், செராமிக் கோட்டிங், கிராப்பின் கோட்டிங், பெயிண்ட் ப்ரொடக்ஷன், ஹெட் லைட் பாலிசிங், கிளாஸ் பாலிசிங் உட்பட அனைத்து விதமான டீடெயிலிங் பணிகளும் செய்யப்படுகிறது. குறிப்பாக கோவையில் முதன்முறையாக ஜப்பானிய தொழில்நுட்பத்தில் நீண்ட நாள் வரக்கூடிய செராமிக் கோட்டிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திறப்பு விழா சலுகையாக 400 ரூபாய் முதல் கார் வாஷ் செய்யப்படுகிறது என்று ஹோப் இன் கேரேஜ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.