கோவை,

கோவை நீதிமன்றத்தின் பின்புற வாசலில் வாலிபர் ஒருவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் விஜயன் என்பவர் மகன் ஸ்ரீராம் என்கின்ற குரங்கு ஸ்ரீராம் (22). கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பன் கவாஸ்கான் ( 23) இருவரும் பைக்கில் ரத்தினபுரியில் இருந்து அஞ்சுகம் நகர் வழியாக துடியலூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது 2 பைக்கில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஸ்ரீராம் தாங்கள் மறைத்து வந்திருந்த வீச்சரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஸ்ரீராமை சரமாரியாக வெட்டியது. இதில் ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தவர்  கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல். இவரும் சிவானந்தா காலனியை சேர்ந்த மனோஜ் ஆகிய இருவரும்  வாய்தாவிற்காக இன்று திங்கட்கிழமை காலை   கோவை நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். காலை 11 மணியளவில் விசாரணை முடிந்த அவர்கள் நீதிமன்ற பின் வாசல் வழியாக நடந்து கோபாலபுரம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர் .அப்போது அவர்களை ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று பின் தொடர்ந்து வந்துள்ளது. கோகுலும் மனோஜம் அங்குள்ள டீக்கடை முன்பு நின்று டீ சாப்பிடுவதற்காக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கும்பல் வீச்சருவாளால் கோகுல் கழுத்தில்  வெட்டினர். இதில் நிலை குலைந்து போன கோகுல் மேலும் அவர்கள் வெட்டுவதை தடுக்க முயன்றார். ஆனால் அப்போது அந்த கும்பல் கோகுலின் வயிறு ,கை, தலை ஆகிய இடங்களில் பலமாக வெட்டியது . சாலையின் நடுவே கோகுலை அந்த கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் கோகுல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து இறந்தார். இறந்த கோகுல் தனது வயிற்றில் பின்பகுதியில் கத்தி ஒன்றை பாதுகாப்புக்காக வைத்திருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடன் வந்திருந்த மனோஜ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் மனோஜன் தலை மற்றும் கைகளிலும் வெட்டியது. பரபரப்பான அந்த சாலையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று அரிவாளால்  வெட்டியதை பார்த்த அந்த பகுதியிலிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அப்பகுதியில் இருந்தவர்கள் சத்தம் போடவே அந்த கும்பல் அங்கிருந்து சாவகசமாக நடந்து சென்றனர். சிறிது தூரத்தில் உள்ள வணிக வளாகத்தில்  அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த பொருட்களை போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்தால் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்து கிடந்த கோகுலின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த மனோஜ்க்கு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடம் வக்கீல்கள் அலுவலகம் நிறைந்த பகுதியாகும். வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை விசாரணைக்காக ஏராளமான நபர்கள் வந்து செல்லும் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்ற இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்த தகவல் அறிந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் உதவி கமிஷனர் வின்சென்ட் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோகுல் உள்ளிட்டோ ஏற்கனவே ஸ்ரீராம் ஸ்ரீராமை பெட்டி கொலை செய்த சம்பவத்திற்கு பழிக்கு பலியாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *