கோவை மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு 93 சதவீதம் வினியோகம்

கோவை, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கடநத 9-ந் தேதி முதல் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 88 ஆயிரம் அரிசி குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களில் 1,089 பேர் இலங்கை தமிழர்கள். இவர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று வரை மாவட்டம் முழுவதும் 93 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோ கிக்கப்பட்டு உள்ளது. மேலும் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *