கோவை,
கோவை வடக்கு மாவட்ட தே.மு.தி.க சார்பில் கணபதி பஸ் நிலையம் அருகில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு வடக்கு மாவட்ட செயலாளர் எம்.சிவராமன் தலைமை வகித்தார்.கணபதி பகுதி செயலாளர் எஸ்.பி.ராமசாமி மற்றும் கேப்டன் மன்ற குமார் வரவேற்று பேசினர். மாவட்ட கழக துணை செயலாளர் பாபு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மலைராஜ் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு கழக கொடி ஏற்றி பொங்கல் வைத்தார். பின்னர் 5 ஆயிரம் பேருக்கு 2 கரும்பு, ஒரு கிலோ அரிசி, ஒருகிலோ வெல்லம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசிய தாவது:-தே.மு.தி.க. பொங்கல் விழா மட்டுமல்ல கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று அனைத்து மத நிகழ்ச்சிகளையும் சாதி, மதவேறுபாடின்றி கொண்டாடி வருகிறது. நாங்கள் யாரிடமும் நிதி திரட்டாமல் பொங்கல் தொகுப்பு வழங்கு கிறோம். தமிழக அரசு ரூ.1000, மற்றும் ஒரு கரும்புடன், சர்க்கரை, அரிசியை வழங்கி வரு கிறார்கள். அதை வாங்க கூட்டம் முண்டியடிக் கிறது.தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மக்களை கையேந்த வைத்துவிட்டனர். டாஸ்மாக் கடையை எங்கும் திறந்து வைத்துள்ளனர். எதை பற்றியும் கேள்வி கேட்கவிடாமல் போதையிலேயே அலைய விட்டுள்ளனர். மக் களை வறுமைகோட்டுக்கு கீழ் தள்ளப் பார்க் கிறார்கள். இந்த நிலையை மக்கள் மாற்றி காண்பிக்க வேண்டும். மக்கள் மாறினால் தான் தமிழ்நாடு மாறும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இல்லாதபோது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்தபோது ஒரு நிலைப்பாடுடன் செயல்படுகி றார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. ஆனால் சட்டசபையில் தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பெண்காவலரிடமே அந்த கட்சியினர் அத்து மீறி உள்ளனர். அதில் தொடர்புடையவர் களை குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது ஜாமீ னில் வெளியே வரமுடியாத அளவுக்கு சிறை யில் அடைக்க வேண்டும்.
சட்டசபையில் இருந்து கவர்னர் வெளிநடப்பு செய்தது இந்தியாவி லேயே இதுதான் முதல் முறை. கவர்னர் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கவர்னருக்கு எதிரான தீர்மானத்தை நிறை வேற்றி அவரை முன்னிலைப்படுத்தி அரசியல் நாடகம் நடத்தி உள்ளனர். ஆனால் மக்கள் இதனை கண்டுகொள்ள வில்லை. தே.மு..தி.க மக்களுக்கு நன்மைகளை செய்து லட்சியத்தை அடைவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாநில துணை செயலாளர் அக்பர் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மாவட்ட செயலாளர்கள் சிங்கை கே. சந்துரு, ஜெகன், மாநில மகளிர் அணி துணைச்செயலாளர் வனிதா துரை, மாநில தொழிற்சங்க பேரவை சட்ட துணை ஆலோசகர் முருகராஜ் மற்றும் மாவட்ட கழக துணைச் செயலாளர் ஜாகீர்உசேன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சரவணன்,சாகுல் அமீது, முத்துக்குமரன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர்கள் காளிமுத்து, பாலகிருஷ்ணன், வினோத்குமார் மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி சிவபாலன், கணபதி பகுதி கழக நிர்வாகிகள் மணிவண்ணன், சுந்தர பாண்டியன் ,மாரியப்பன், சுந்தர், அழகர், செல்வராஜ், கணபதி லோகு, சந்தோஷ்குமார்,ராஜா, கவுண்டம்பாளையம் பகுதி கழக செயலாளர் ராஜு, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் சோமசுந்தரம், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சக்கையா, சாய்பாபாகாலனி பகுதி அவைத்தலைவர் ரமேஷ்கிருஷ்ணா, கவுண்டம்பாளையம் பகுதி அவைத்தலைவர் ராஜேந்திரன், சத்தியேந்திரன், கூடலூர் நகர செயலாளர் ஜீவானந்தபெருமாள், எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி கழக செயலாளர் சிவஇளங்கோ, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி கழக செயலாளர் சரவணன், வட்ட கழக செயலாளர்கள் ,சின்னசாமி, பாலகிருஷ்ணன், கார்த்திகேயன்,சசிரேகா, பாண்டியன் ,
மற்றும் கழக தொண்டர்கள் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
%d bloggers like this: