
சேலம் மாவட்டத்தில் உள்ள குகை என்ற பகுதியில் சுதந்திரா இயக்கத்தின் சார்பில் திருக்குறள் திறனறியும் போட்டிகள் நடைபெற்றது.
இந்த மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முப்பால் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
மேலும் இந்த போட்டியில் 1330 குறட்பாக்களையும் 266 அஞ்சல் அட்டையில் எழுதி வெற்றி பெற்றமைக்காக கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு முப்பால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும்
கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் ரிதன்யா, விஷ்னு,
ஞான ஸ்ரீ ஆகிய மூன்று பேருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கு கௌரவித்தனர்.