கோவையில் நாளை ஜியோ 5G சேவை துவக்கம்

தமிழ்நாட்டில் சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரையில் ஜியோவில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜ் நாளை  தொடங்கி வைக்கிறார்.

இந்தியா முழுவதும் 2022 அக்டோபர் மாதம் 1 ஆம் நாள் அதிவேக 5ஜி சேவையைப் பிரதமர் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக சென்னை, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய இடங்களில் 5ஜி சேவை செயல்பாட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *