
கோவை,
விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 38-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கொண்டயம்பாளையம் ஊராட்சி வையம்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளருமான நா.கார்த்திக், தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி., ஏ.பி நாகராஜ், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், ஒன்றிய செயலாளர் சுரேஷ், வெள்ளானப்பட்டி துணைத்தலைவர் விஜயன், எஸ்.எஸ்.குளம் ஒன்றிய அவைத்தலைவர் ராஜன், வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜான் மற்றும் பலர் கலந்து கொண்டு நாராயணசாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.