கோவை,
அவிநாசி அரசு பணியாளர் நகரை சேர்ந்த வர் பழனிகுமார் (40). திருப்பூரில் உள்ள பனி யன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுபஸ்ரீ( 34). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
சுபஸ்ரீ, பூண்டி அருகே உள்ள ஈஷா யோகா மையத் தில், ஏழு நாள் பயிற்சி வகுப்பிற்காக கடந்த, 11ம் தேதி வந்துள்ளார். நேற்று முன் தினம், பயிற்சி வகுப்பு முடிந்த பின், மனைவியை அழைத்துச் செல்ல, பழனிகுமார் வந்துள்ளார்.
வெகுநேரம் ஆகியும், சுபஸ்ரீ வெளியே வராத தால், பழனிக்குமார் யோகா மையத்தின் உள்ளே சென்று கேட்டுள்ளார். பயிற்சி முடித்து, அனைவ ரும் கிளம்பி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, பயிற்சி முடித்த பின், சுபஸ்ரீ வெளியேறி, ஒரு கால் டாக்ஸியில் ஏறி சென்றது தெரிந்தது. சம்பந்தப்பட்ட கால் டாக்ஸி டிரைவரிடம் விசாரித்த போது, சுபஸ்ரீயை செம்மேட்டில் இறக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். இருப்பினும்,சுபஸ்ரீ நேற்று முன்தினம் முழுவதும் வீட்டுக்கு வராததால், மனைவியை கண்டுபி டித்து தரக்கோரி, ஆலாந்துறை போலீசில் புகார் அளித்துள்ளார். ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதில் வெள்ளை சீருடையுடன் வரும் சுபஸ்ரீ ஒருவித பதட்டத்துடன் ஓடி செல்வது போன்ற காட்சிகள் உள்ளது.என்ன காரணத்திற்காக சுபஸ்ரீ அப்படி சென்றார்?அவர் ஏன் வீட்டிற்கு செல்லவில்லை? வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என பல கோணங்களில் விசாரனை நடத்தி வருகின்றனர்.
%d bloggers like this: