கோவை,
மனித உரிமை நீதிமன்ற கோவை மாவட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர் ராஜபிரியா வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள கூறியதாவது :
சட்டத்தின் முன் அனைவரும் சமம். மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்பதே மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் சாராம்சம். அடுத்தவர் வாழ்வில் அத்துமீறுதல், தனக்குள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் மனித உரிமை மீறல் ஆகும். மக்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில், ஐ.நா., சபையில், 1948 டிசம்பர் 10ல், ‘சர்வதேச உரிமை பிரகடணம்’ என்ற சாசனம் வெளியிடப்பட்டது. இந்தியாவில், 1950 ஜனவரி, 26ல் சர்வதேச மனித உரிமை பிரகடணத்தின் சாராம்சத்தை உள்ளடங்கி, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வெளியிடப்பட்டது.மனித உரிமைகள் சட்டம் 1993ன் படி, தேசிய உரிமைகள் ஆணையம் ஒன்றும், மாநில மனித உரிமைகள், மனித உரிமையை பாதுகாக்கும் சட்டம் இயற்றப்பட்டது. மனித உரிமைகள் பிரிவு 30ன் படி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் மனித உரிமைகள் நீதிமன்றம் செயல்படுகின்றன. இந்நீதிமன்றங்களில், மனித உரிமைகள் வழக்குகள் நடக்கும்.ஒரு நபருக்கு எதிராகவோ, பல நபர்களுக்கு எதிராகவோ மனித உரிமை மீறப்பட்டிருந்தால், மீறப்பட்டவரின் பெயர், பதவி, முகவரி, அவர் செய்த குற்ற நடவடிக்கை குறித்து, போலீஸ், கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவில் புகார் கொடுக்கலாம். புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ‘குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 200ன் படி’ குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முறைப்படி புகார் தாக்கல் செய்யலாம். நீதிமன்ற நடுவர், புகார்தாரரை அழைத்து, விசாரித்து புகாரை பதிவு செய்யலாம். மேல்முறையீடு தேவையிருப்பின், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
%d bloggers like this: