
கோவை
கோவை சுக்கிரவார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி என்பவரின் மகன் திருமுருகன் (17) இவர் 9 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலைக்கு எதுவும் சொல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தந்தையிடம் பைக் ஒன்று வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை ஒரு மாதம் கழித்து வாங்கி தருவேன் என கூறியிருக்கிறார் .ஆனால் அவர் வாங்கித் தரவில்லை என கூறப்படுகிறது .இதை அடுத்து மீண்டும் திருமுருகன் பைக் வாங்கி தர கேட்டுள்ளார் . அப்போதும் அவரது தந்தை உனக்கு எந்த வேலையும் இல்லை எதற்காக உனக்கு பைக் என கேள்வி கேட்டுள்ளார். இதை தொடர்ந்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது .இதனால் திருமுருகன் மனமடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திருமுருகன் பாத்ரூமுக்கும் சென்று கதவை பூட்டி தூக்கு போட்டுக் கொண்டார் .சிறிது நேரம் கழித்து அவரது தாயார் பாத்ரூம் கதவை தட்டிய போது கதவை திறக்கவில்லை .இதை அடுத்து அவர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் பாத்ரூம் கதவை உடைத்து பார்த்த போது திருமுருகன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இது பற்றி தகவல் அறிந்த வெரைட்டி ஹால் ரோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.