வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கயிற்றால் கழுத்தை இறுக்கி படுகொலை

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகு தியை சேர்ந்தவர் மயிலாத்தாள் ( 65). இவரது கணவர் ராமசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர் களது ஒரே மகனும் கடந்த 20 ஆண்டுக ளுக்கு முன் காணாமல் போய்விட்டார். இத னால் மூதாட்டி மயிலாத்தாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை மூதாட்டி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மேலும் வீட்டில் இருந்து எந்த சத்தமும் கேட்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக் கம், பக்கத்தினர் மூதாட்டியின் வீட்டு கதவை திறந்து பார்த்தனர். அங்கு மூதாட்டி மயிலாத் தாள் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட நிலை யில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இத னால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சிங்கா நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த னர்.
தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து இறந்து கிடந்த மூதாட்டி
மயிலாத்தாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபு ணர்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் தடயம் ஏதும் உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *