3 மாணவர்கள் பலியான இடத்தின் அருகே கார் மரத்தில் மோதி விபத்து

சிவகங்கை மாவட்டம் சிங்கமுகை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலர் மருதமலை கோவிலுக்கு காரில் வந்த னர். பின்னர் தெனமநல்லூர் வழியாக வெள்ளியங்கிரி கோவிலுக்கு செல்ல காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக டயர் வெடித்து கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள்சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து நடந்த இடத்தின் அருகில் தான் கடந்த சில நாட்களுக்கு முன் கிணற்றுக்குள் கார் பாய்ந்து 3 மாணவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *