மூதாட்டி காதில் இருந்து கம்மலை பறித்த திருடர்கள்

கோவை சுங்கம் சிவராமன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த்தன் என்பவரின் மனைவி ஆரோக்கிய மேரி(60). இவர் நேற்று மாலை வாக்கிங் சென்று விட்டு வீட்டின் அருகே நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு நபர்கள் ஆரோக்கியம் மேரியை தள்ளிவிட்டு அவர் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் மதிப்புள்ள தங்க கமலை பறித்துக் கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர் . கம்மலை பறிக்க விடாமல் ஆரோக்கியமேரி அவர்களை தடுக்க முயன்றார். ஆனால் அவர்கள் அவர் காதில் அணிந்திருந்த கம்மலை பறித்ததில் ஆரோக்கிய மேரிக்கு காதில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதை அடுத்து காயங்களுடன் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் .மேலும் ஆரோக்கிய மேரி ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *