வழிப்பறி செய்த நால்வர் கைது

கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஸ்லம் என்பவரின் மகன் முகுரான்(39) இவர் நேற்று இரவு கோவை ரயில்வே ஸ்டேஷன் பின்பகுதியில் உள்ள குட்செட் சாலையில் ரயில் டிக்கெட் புக் செய்வதற்காக சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை மறித்த நான்கு வாலிபர்கள் மிரட்டி முகரான் வைத்திருந்த 730 ரூபாய் பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதை அடுத்து முகுரான் உக்கடம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .விசாரணையில வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது முனுசாமி என்பவரின் மகன் சதீஷ் (19) திருமூர்த்தி என்பவரின் மகன் சந்தோஷ் (38 ),நடராஜன் என்பவரின் மகன் வேல்முருகன்( 30) ரங்கராஜன் என்பவரின் மகன் ராமதுரை (29) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அ வர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *