மாசாணியம்மன் கோவிலில் நடிகர் விஜய் பெற்றோர் தரிசனம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நடிகர் விஜய்யின் பெற்றோர் சுவாமி தரிசனம் செய்தனர்.கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோர், நேற்று வந்தனர். கோவிலில் அம்மனை தரிசித்து பிரசாதம் பெற்றனர்.இதையறிந்து, கோவிலில் திரண்ட மக்கள், இவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சுவாமி தரிசனத்துக்காக வந்திருப்பதால், நிருபர்களுக்கு பேட்டியளிக்காமல் சென்றார்.