ஒற்றை யானையை தேடி
வனத் துறையினர் தீவிர வேட்டை

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் சீங்குளியில் உடல் நல குறைவால் நின்ற காட்டுயானை தனிமைபடுத்தி சிகிச்சை தர வனத்துறை கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. 15 ஆம் தேதி வனத்துக்குள் சென்ற காட்டு யானை அதன் பின் இரண்டு நாட்கள் இடைவெளியில் செங்குட்டை மலை அடிவாரம் வந்தது. ஆனால் வனத்திலிருந்து வெளியேறவில்லை. பின்னர் ஊக்கைணூர் மலை பகுதிக்கு சென்ற உடல் நல குறைவுடன் உலா வந்த ஒற்றை காட்டு யானை மூன்று யானை மந்தைகளுடன் சேர்ந்து நடந்தது. ஊக்கைணூர் அடுத்து யானை ஆனைக்கட்டி வடக்கு வனப்பகுதிக்கு சென்றது. யானை அங்கு நான்கு யானை மந்தை கூட்டத்துடன் சேர்ந்து வனத்தில் நடந்தது. யானையை தேடுதல் குழு நெருங்கும் நேரத்தில் ஆக்ரோசமாக அச்சுறுத்தி விரட்டியதனால் யானையை தனிமையில் இட்டு சென்று சிகிச்சை தர வனத்துறைக்கு நெருக்கடி ஏற்ப்பட்டது. யானை அடர் வனத்துக்குள் சென்றதனால் அரிவாள், துப்பாக்கி , நெருப்பு பந்தங்களுடன் ரோந்து பணியில் வனத்துறை தேடுதல் குழு ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் யானையை தரை பகுதிக்கு இழுக்க யானையின் வலசை பாதைகளிலும் , நீர் நிலைகளிலும் யானையின் விருப்ப உணவான பழாப்பழங்களை கொட்டி ஈர்க்க வனத்துறை முயன்றனர். காட்டுக்குள் இருந்து யானை வெளியேறுவதனை கண்காணிக்க செங்குட்டை, வனக்குட்டை, கோழிக்கண்டி, ஆனைக்கட்டி வடக்கில் நீர் நிலைகளை ஒட்டி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியிருந்தனர். ஆனால் கண்காணிப்பு கேமராவில் யானை நடமாடியதற்க்கான தடயம் பதிவாகவில்லை. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் 3 தேடுதல் குழுவும், கோயமுத்தூர் வன சரகத்தில் 2 குழுக்களும் அடர் வனத்தில் யானையை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கண்டிவழி , சேம்புக்கரை, தடாகம் பள்ளத்தாக்கின் மத்திய வனப்பகுதியில் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் கட்ந்த சில் நாட்களுக்கு முன்பு அதிகாலையில் யானை வனத்துறை கண்களில் தென்பட்டது. இதனை வன தேடுதல் குழு யானையை படம் பிடித்திருக்கின்றனர். யானை தொடர்ந்து வனபகுதிக்குள் நடமாடுவதனால் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிகின்றது. யானையை வனத்துறை நெருங்கும் நிலையில் கலீம் கும்கி தயார் நிலையையில் வைக்கப்பட்டிருக்கின்றன. காட்டு யானையை நெருங்கிய உடன் கும்கி உதவியுடன் அடுத்த கட்ட பணிகளில் ஆரம்பமாகுமென எதிர்பார்க்கப்படுகின்றன. ஐந்து தேடுதல் குழு வன பகுதிகளில் முகாமிட்டிருக்கின்ற நிலையில் யானையின் உடல் நலம் குறித்து அறிய யானையை சுகுமார் தலைமையிலான வனத்துறை மருத்துவர்கள் குழு நெருங்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *