போதை மாத்திரை கேட்டு மெடிக்கல் ஷாப் உரிமையாளருக்கு கத்தி குத்து

கோவை,
கோவையில் போதை மாத்திரை கேட்டு தர மறுத்த மெடிக்கல் ஷாப் உரிமையாளர்க்கு இளைஞர் மூவர் சேர்ந்து கத்தி குத்துத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் அடுத்த எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வருபவர் மோகன் குமார்,நேற்று இரவு, மூன்று இளைஞர்கள் ஆட்டோவில் மோகன்குமாரின் மருந்து கடைக்கு வந்துள்ளனர்.வந்த மூவரும் மோகன் குமாரிடம் போதை ஏற்றும் மாத்திரைகள் வேண்டும் என கேட்டு உள்ளனர்.அதற்கு மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள். வழங்க முடியாது என்று மோகன்குமார் கூறியதால் ஆத்திரத்தில் மூவரில் ஒருவர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளார் . இதில் பலத்த காயம் மோகன் குமாருக்கு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த மூவரும் தப்பியோடியுள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து மோகன்குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்த நிலையில் வழக்குப் பதிவு சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவத்தில் காயமடைந்த மோகன் குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
போதை மாத்திரை கேட்டு இளைஞர்கள் கத்தியால் மெடிக்கல் ஷாப் உரிமையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.