
கோவை
தமிழ் மாநில காங்கிரஸின் மாணவரணி மாநில துணைத் தலைவர் அஸ்வின் சந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் ஜிகே மூப்பனாரின் 91வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மாணவரணி சார்பில் நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நட உள்ளனர். அதேபோல அந்தந்த பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர் காப்பகங்களில் மதிய உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் உள்ள ஐந்து ஆதரவற்றவர் இல்லங்களில் மாணவரணி சார்பில் மதிய உணவு வழங்கப்பட உள்ளது. மேலும் ஆண்டுதோறும் தலைவர் ஜி. கே .மூப்பனாரின் பிறந்தநாள் விழாவை விவசாயிகள் மாநாடாக தமாகா சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள விவசாயிகள் மாநாட்டிற்கு கோவையில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர் என்று அந்த அறிக்கையில் அஸ்வின் சந்தர் தெரிவித்துள்ளார் .