
கோவை உக்கடத்தில் நடைபெறும் மேம்பாலப் பணிகளுக்காக புதிதாக அமைக்கப்பட உள்ள 110 கிலோ வாட் புதைவட கேபிள் மின் இணைப்பு பரிசோதனை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 18) பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் ந.துரைசாமி தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், ஆசாத் நகா், வள்ளல் நகா், ஜி.எம்.நகா், லாரி பேட்டை, ஹவுஸிங் யூனிட், சாரமேடு பிரதான சாலை, அரபா காா்டன், ஜெ.ஜெ.காா்டன்.