தேசிய கொடியை பத்திரமாக மடித்து பாதுகாக்க வேண்டும்

கோவை, ஆக. 16

நாடு முழுவதும் நேற்று. 75வது சுதந்திர தினம் சிறப்பாக, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரத மர் அறிவுறுத்தியபடி, 13, 14 மற்றும், 15ம் தேதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி சிறப்பித்தனர்.

இச்சூழலில் நம் வீடுகளில் ஏற்றப்பட்ட தேசிய கொடிகளை, சரியாக கழட்டி பத்திரப்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. என்ன வேண்டும்; என்ன செய்யக்கூடாது? *கொடிகளை ஒருபோதும் கழிவுகள் போன்று குப்பை *

தொட்டி, தரை, சாக்கடைகளில் வீசவே கூடாது.

‘கொடியை பத்திரமாக எடுத்து, அரசு அறிவுறுத்தியுள்ள

துபோல் மடித்து, பெட்டி அல்லது பீரோவில் வைக்க

  • வேண்டும். கொடியை கசக்கி அல்லது சுருட்டி சாதா ரண துணிகளை போல் கையாள கூடாது. தேசிய கொடி மீது கால் படக்கூடாது; கயிறாக பயன்
  • படுத்த கூடாது. தேசிய கொடியை சரியாக மடிக்க மத்திய அரசு வழிமுறைகள் வகுத்துள்ளது. இதன்படி மூவர்ண கொடியை கிடைமட்டமாக பிடிக்க வேண்டும். நடு வில் உள்ள வெள்ளை பட்டையின் கீழ் ஆரஞ்சு மற்றும் பச்சை நிற பட்டைகளை மடித்து வைக்க வேண்டும்.

இப்போது ஆரஞ்சு மற்றும் பச்சை நிற பட்டைக ளின் குறிப்புகளுடன் அசோக சக்கரம் மட்டும் தெரியும் வகையில், வெள்ளை நிறப்பகுதியை மடக்க வேண் டும். மடித்த கொடியை உள்ளங்கை அல்லது கைகளில் வைத்து பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *