
கோவை,
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் நித்யா ( 27). இவர் அங்குள்ள ஒரு
கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கம் பேரூரை சேர்ந்த சரவணன்
என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த
நிலையில் சரவணனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவர் குடிபோதையில் தினமும் நித்யாவை கொடுமைபடுத்தி வந்தார். இதனால் நித்தியா கணவரை பிரிந்து தனது தாயார் வீட்டிற்கு வந்து வாழ்ந்து வந்தார். நேற்று சரவணன்,
நித்தியாவின் வீட்டிற்கு வந்தார். அங்கு சரவணன், நித்தியாவிடம்
வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்க இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை
எடுத்து நித்யாவை குத்தினார். பலத்த காயம் அடைந்த அவர் சத்தம்
போட்டார். அவரின் சத்ததை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் வருவதை பார்த்து சரவணன் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர்
காயம் அடைந்த நிதியாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து நித்தியா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வருகின்றனர்.