நாக சக்தி அம்மன் தியான பீடத்தில் திருக்கல்யாண வைபவம் 

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாக சக்தி அம்மன் தியான பீடத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நாக சக்தி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நிலவேம்பு சித்தர் பாபுஜி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.ஆடி வெள்ளியை முன்னிட்டு 108 சுமங்கலி பூஜை நாகசக்தி அம்மன் நாகேஸ்வரமூர்த்தி திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. திருக்கல்யாண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜாக்கெட் மஞ்சள் குங்குமம் மங்கல கயிறுஅனைத்து பெண்களுக்கும் தரப்பட்டது. தொடர்ந்து கல்யாண விருந்து நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை செயலாளர் கணேஷ் குமார் செயலாளர் குரு மாதாஜி சரஸ்வதி அம்மாள் ,பாக்கியலட்சுமி, பொருளாளர் உமா மகேஸ்வரி, துணைத் தலைவர் தில்லை நகர் நாச்சிமுத்து, தங்கதுரை ஆகியோர் செய்திருந்தார்கள்

Attachments area

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *